Wednesday, August 30, 2006

என் காதலே !


இத்தனை நாட்கள்
உன் அருகில் இருந்தேன் ,
உன்னை காண தோன்றவில்லை !
இன்று ,
ஆயிரம் மைல் தூரம்
தள்ளி வந்த பின் ,
உன்னை இரசிக்கின்றேன்
நிலவின் வடிவில் !

அன்று உன்னை
வர்ணிக்க என் நா எழவில்லை ;
இன்று உன் ரம்யமான அழகும் ,
குழந்தை பேச்சும் ,
அலை அலையாய்
கரையை தொட்டு செல்கிறது !

நான் உன்னிடம்
என் அன்பை கூறிய
அந்த பொழுதில் ,
உன் காதலை வருடினாய் !
இன்று நினைத்தாலும் ,
என் மனம் பறக்கிறது ,
பட்டாம் பூச்சிகளாக !

நீ என்னை நேசித்தாய் ,
நான் உன்னை சுவாசித்தேன் ...
நம் இதயங்களை
பரிமாறினாலும் ,
நம் நினைவுகள்
என்றுமே ...
நிலைத் திருகட்டும் !

1 comment:

Anonymous said...

un kavidai kanden...
unnodu palagiya ninaivugal illai...
un kangalum pechum mattum podha villai...
un moochum viralum ennai theenda villai...
un mounathal en idhayam thaanga villai...
un veetu tholaipesikku therinda en thuyaram unakku puriya villai...
unnai kana oru murai...ore orumurai thudithen...marutthu vittai...
un parvai padadha veru desam sendren...
un ninaivai...
nee thandha nerinji mullum andha irandu vellai ceramic purakkallum mattum than micham
- r