Tuesday, June 08, 2010

ஆதாமின் ஒரு நாள்...


ஏதேன் தோட்டத்தை மட்டும் இரசித்து வந்த
ஆதாமின் ஒரு நாள்...

தன் சோம்பலை முறித்து வெளிச்சம் வர,
காலையில் உதித்த சூரியனும் !
அந்த நீண்ட இருளில் விளையாட,
வானில் உலாவிய நிலவும் !

அழகிய தோற்றத்தில் வகையான மரங்களும்,
அதில் விளைந்த சுவையான கனிகளும் !
சிலிர்ப்பூட்டும் பல செடிகளும்,
அதில் பூத்த வண்ணப் பூக்களும் !

கொஞ்சி விளையாட பிராணிகளும்,
பார்த்து திகைத்த பறவைகளும் !
தன் சக்தியை காண்பித்து,
சண்டை போட முரட்டு மிருகங்களும் !

தன்னையே வியப்பூட்டும் நீர்வீழ்ச்சியும்,
அதில் நீந்தி எழ ஆறுகளும்,
இன்னும் எத்தனை எத்தனையோ அதிசயத்தை,
தனக்கு மட்டுமே சொந்தமாக்கி, காத்தும் வந்தான்  - ஆதாம் !

" மனுஷன் தனியாய் இருப்பது நல்லதல்ல;
ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் "
                                                                  -ஆதியாகமம் 2:18

அவன் மனதில் அப்படி என்ன சோகம்
பூண்டிருக்க கூடும் என ஏவாளைப் படைத்தான் ?!
தன் விலா எலும்பிலிருந்து படைக்கப் பட்டவள்,
ஏதேன் தோட்டத்தை விட அவ்வளவு அழகாய் இருந்தாளா ?!

கடவுளின் பேச்சையும் கேளாமல் அவளின் வசியப்
பேச்சிற்க்கு ஜீவவிருட்சத்தை புசித்தானே !!
கிடைத்த பலன்... ஆறறிவு - ஆனால்
இழந்ததோ ஏதேன் தோட்டத்தை !!

ஏதேன் தோட்டத்தை விட்டு வந்த பின்...
அவனது ஒரு நாள் சந்தோசத்தை
நினைத்து வருந்தி இருப்பனா ?!

அல்லது...
ஏவாளின் அரவணைப்பில் அதை விட
சந்தோசத்தை பெற்றிருப்பனா ?!

Saturday, June 05, 2010

கோடையில் ஒரு மழைக்காலம்


தினமும்...
அந்த சூரியனின் கொடிய முகம்,
என்னை எரித்த பொழுது - கதறினேன் !
வெப்பத்தின் ஆட்டத்தை அடக்க,
நீ வரமாட்டாயா என்று ஏங்கினேன் !

உன் ஒரு துளி மேனியில் பட்டதும்,
என் உடல் சிலிர்த்தது !
உன் வரவை மேல்நோக்கி பார்த்தேன்,
என் முகம் மலர்ந்தது !

பொன்நிற மேனியை உன் சாம்பல் நிறம்,
தோய்த்த பொழுது !
என் மனம் மகிழ்ந்ததை
நீ கண்டிருப்பாய் !

எதனை நாட்கள்...
உன்னை காணமல் - பிரிந்திருந்தேன் !
எத்தனை நாட்கள்...
என்னை அணைப்பாய் - என ஏங்கியிருப்பேன் !

இன்று...
அத்தனையும் நினைவாகியது,
உன்னுள் ஆடி பாடி விளையாடுகிறேன் !

என்னை பிரியாதே...
உன்னோடு உறவாட இன்னும்,
சிறிது நேரம் எனக்கு தருவாயா ?!

கோடை மழையே...!!!

Friday, June 04, 2010

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் !

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்,
பிறந்த பின்னர், யாதும் ஊரே, யாவரும் கேளிர்!
உண்பது நாழி உடுப்பது இரண்டே,
உறைவிடம் என்பது ஒன்றேஎன!
உரைத்து வாழ்ந்தோம்...
உழைத்து வாழ்வோம்...


தீதும் நன்றும் பிறர் தர வாரா எனும்,
நம் மொழியே நம் பொன் மொழியாம்!
போரை புறம் தள்ளி,
பொருளைப் பொதுவாக்கவே!
அமைதி வழி காட்டும் அன்பு மொழி,
அய்யன் வள்ளுவரின் வாய்மொழியாம்!


செம்மொழியான தமிழ் மொழியாம்!

ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே,
உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்து கூறும்!
ஒல்காப்  புகழ் தொல்காப்பியமும்,
ஒப்பற்ற குறள் கூறும் உயர் பண்பாடு!
ஒலிக்கின்ற சிலம்பும், மேகலையும்,
சிந்தாமணியுடனே வளையாபதி குண்டலகேசியும்!

செமொழியான தமிழ் மொழியாம்!

 
கம்ப நாட்டாழ்வாரும்,
கவியரசி அவ்வை நல்லாளும்,
எம்மதமும் ஏற்றுப் புகழ்கின்ற,
எத்தனையோ ஆயிரம் கவிதை நெய்வோர் தரும்!
புத்தாடை அனைத்துக்கும்,
வித்தாக விளங்கும் மொழி!

செமொழியான தமிழ் மொழியாம்!

 
அகமென்றும் புறமென்றும் வாழ்வை,
அழகாக்க வகுத்தளித்து!
ஆதி அந்தமிலாது இருக்கின்ற இனிய மொழி,
ஓதிவளரும் உயிரான உலக மொழி!
நம்மொழி நம்மொழி,

அதுவே...

செம்மொழியான தமிழ் மொழியாம்!


வாழிய வாழியவே...
தமிழ் வாழிய வாழியவே...!