Wednesday, August 30, 2006

என்ன தவம் செய்தேனடி...!


கவலையில் வாடிய
அந்த பொழுதில்
ஒரு - தாயாக
ஆறுதல் தந்தாயடி !

மெளனமாக உலகில்
வாழ்ந்து கொண்டிருந்தேன்
ஒரு - சிநேகிதியாக
மகிழ் வித்தாயடி !

தொல்லைகளின் நடுவில்
சிக்கிய பொழுது
ஒரு - அன்பராக
உதவி செய்தாயடி !

இருளில் இருந்த
என் மனதை
ஒரு - சூரியனாக
விடியல் தந்தாயடி !

என்ன தவம் செய்தேனடி
உன்னை என் காதலியாக பெற !

நான் ரசிகனா...?


வானத்தை இரசித்தேன் - அதன்
மேகங்களை இரசிக்க வில்லை !

வானவில்லை இரசித்தேன் - அதன்
வண்ணங்களை இரசிக்க வில்லை !

மைனாவை இரசித்தேன் - அதன்
கருமையை இரசிக்க வில்லை !

இறுதியில் ...

உன்னை இரசித்த பொழுது - உன்
உள்ளதையும் இரசிதேனடி !

என் இரசனை மாறியது !

என் காதலே !


இத்தனை நாட்கள்
உன் அருகில் இருந்தேன் ,
உன்னை காண தோன்றவில்லை !
இன்று ,
ஆயிரம் மைல் தூரம்
தள்ளி வந்த பின் ,
உன்னை இரசிக்கின்றேன்
நிலவின் வடிவில் !

அன்று உன்னை
வர்ணிக்க என் நா எழவில்லை ;
இன்று உன் ரம்யமான அழகும் ,
குழந்தை பேச்சும் ,
அலை அலையாய்
கரையை தொட்டு செல்கிறது !

நான் உன்னிடம்
என் அன்பை கூறிய
அந்த பொழுதில் ,
உன் காதலை வருடினாய் !
இன்று நினைத்தாலும் ,
என் மனம் பறக்கிறது ,
பட்டாம் பூச்சிகளாக !

நீ என்னை நேசித்தாய் ,
நான் உன்னை சுவாசித்தேன் ...
நம் இதயங்களை
பரிமாறினாலும் ,
நம் நினைவுகள்
என்றுமே ...
நிலைத் திருகட்டும் !

Tuesday, July 04, 2006

நண்பனே


பெற்றோர்க்கு
என் உயர்வைத் தெரியும்!
உறவினருக்கு
என் வீழ்வைத் தெரியும்!
அவளுக்கு
என் அன்பைத் தெரியும்!

இவை...
அனைத்தும் அறிந்து,
எனக்கு ஊன்று கோலாய்
இருப்பவன் 
நீ ஒருவன் தானடா! 

வாழ்க்கைப் பாதை


நாம் வாழும்
இந்த வாழ்க்கை ,
ஒரு நீண்ட பயணம் !

அதில் செல்லும்
பாதை புல்தரயாக ,
இருக்க வேண்டும் !
முட்களாக அல்ல !

நான் முட்களில்
நடந்து செல்கையில்
புல்தரயாக வந்து ,
அவதரித்தாள் அவள் !