Thursday, April 29, 2010

தனிமையில் ஓர் இனிமை - My "Self"

யார் யார்...
என்று நினைக்கும் பொழுது,
யாரும் இல்லாமல்,
வேரற்று இருந்தேன் !


இருப்பினும் அந்த,
ஒரு நொடி பொழுதில்...
அவனை உணர்ந்தேன்,
என்னுள் இருக்கும் 'அவன்' !


ஒவ்வொரு நாளும்,
ஒவ்வொரு நேரமும்,
ஒரு போதிமரமாய்...
ஊன்றி யவன் !


என்...
மகிழ்ச்சியில் மலர்ந்தவன்,
கவலையில் வாடியவன்,
வெற்றியில் பங்கேற்றவன்,
தோல்வியில் தூணாய் இருந்தவன் !


இன்று மட்டும் அல்ல,
என்றுமே...
என் தனிமையிலும்,
தோழன் அவன் !