Thursday, February 08, 2007

நடை அழகு !

பெண்ணே...
நீ அணிந்திருக்கும் சேலையினால்,
உன் நடைக்கு அழகா !?

இல்லை...
பெண்களிர்க்கே உண்டான நடையினால்,
உன் சேலைக்கு அழகா !?

உன் இடையினை மெல்ல அசைத்து,
நடையினில் பாவனை காட்டிக்கொண்டு
வருவதனை நான் தினம் ரசிக்கிறேன் !!

ஆண்களிற்கு துணையாக நீ பிறந்தாயா
அல்ல...
ஆண்களை மறைப்பதற்காக நீ பிறந்தாயா
புரியவில்லை !?

உன் நடையினால் எத்தனை ஆண்களை
மயக்கினாயோ தெரியவில்லை;
அதில் நானும் ஒருவன் என்பதனை
மட்டும் தெரிந்துகொள் !!