ஏதேன் தோட்டத்தை மட்டும் இரசித்து வந்த
ஆதாமின் ஒரு நாள்...
தன் சோம்பலை முறித்து வெளிச்சம் வர,
காலையில் உதித்த சூரியனும் !
அந்த நீண்ட இருளில் விளையாட,
வானில் உலாவிய நிலவும் !
அழகிய தோற்றத்தில் வகையான மரங்களும்,
அதில் விளைந்த சுவையான கனிகளும் !
சிலிர்ப்பூட்டும் பல செடிகளும்,
அதில் பூத்த வண்ணப் பூக்களும் !
கொஞ்சி விளையாட பிராணிகளும்,
பார்த்து திகைத்த பறவைகளும் !
தன் சக்தியை காண்பித்து,
சண்டை போட முரட்டு மிருகங்களும் !
தன்னையே வியப்பூட்டும் நீர்வீழ்ச்சியும்,
அதில் நீந்தி எழ ஆறுகளும்,
இன்னும் எத்தனை எத்தனையோ அதிசயத்தை,
தனக்கு மட்டுமே சொந்தமாக்கி, காத்தும் வந்தான் - ஆதாம் !
" மனுஷன் தனியாய் இருப்பது நல்லதல்ல;
ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் "
-ஆதியாகமம் 2:18
அவன் மனதில் அப்படி என்ன சோகம்
பூண்டிருக்க கூடும் என ஏவாளைப் படைத்தான் ?!
தன் விலா எலும்பிலிருந்து படைக்கப் பட்டவள்,
ஏதேன் தோட்டத்தை விட அவ்வளவு அழகாய் இருந்தாளா ?!
கடவுளின் பேச்சையும் கேளாமல் அவளின் வசியப்
பேச்சிற்க்கு ஜீவவிருட்சத்தை புசித்தானே !!
கிடைத்த பலன்... ஆறறிவு - ஆனால்
இழந்ததோ ஏதேன் தோட்டத்தை !!
ஏதேன் தோட்டத்தை விட்டு வந்த பின்...
அவனது ஒரு நாள் சந்தோசத்தை
நினைத்து வருந்தி இருப்பனா ?!
அல்லது...
ஏவாளின் அரவணைப்பில் அதை விட
சந்தோசத்தை பெற்றிருப்பனா ?!

No comments:
Post a Comment