Friday, January 19, 2007

The Last Train




நான் உன்னிடம் விடை பெற்ற
அந்த கடைசி இரயில் பயணத்தில் ...

நீ கொடுத்த ரோஜாவை ;
கையில் வைத்து கொண்டு ,
உன் உருவம் மறையும் மட்டும்
பார்த்து கொண்டிருந்தேன் !

ரோஜாவின் நீர் துளிகளின் நடுவே
உன் கண்ணீர் துளியும் தெரிந்தது !

என் கண்ணீரையும் அதனுடன்
சேர்த்துக்கொண்டு கூறினேன் !

"உன்னை என்றும் மறவேன் ,
கண்மணியே ; விரைவில்
என்னோடு அழைத்து செல்ல !
வருவேன் காத்திரு ! "

இன்றும் அந்த ரோஜாவை
புத்தகம் நடுவே பார்க்கும் பொழுது
உன் முகம் வாடாமல்
இருப்பதை கண்டு மகிழ்கிறேன் !

இதயத்தில் எழுதிய உறவுகள்
என்றும் இறப்பதில்லை !

1 comment:

lilly said...

the last train! why does every journey in life begins n ends in a railway station?? ever thought abt it...its a penetrating poem..