உன்னை தொலைவில் பார்த்த பொழுது ,
என் மனதை பறித்து விட்டாய் !
உன் அருகில் நெருங்கினால் ,
என்னையே மறக்க செய்தாய் !
உன் படர்ந்த அழகு எங்கிருந்து வந்தது ?
உன்னை தொட நினைத்தேன் விலகினாய் !
விலக நினைத்தேன் என்னை தொட வந்தாய் !
உன்னுள் முட்டி மோதி மேலும் கீழும் ,
நீ வரும் அசைவை கண்டு ரசிக்க யுகங்கள் தேவை !
என் நேரம் தொலைந்ததை நினைக்கவில்லை ,
இன்னும் சிறிது நேரத்தில் உன்னையே தொலைப்பேன்
என்பதனை நினைத்து சோர் வுற்றேன் !
உன்னோடு பழகின அந்த சில நிமிடத்தை
பதித்தி கொண்டேன் ,
என் நினைவுகளிர்க்காக !
மீண்டும் உன்னை சந்திப்பேன் என்ற மகிழ்வுடன் ,
பிரியா விடை பெற்றேன் !
அலைகடலே !!!
அலைகடலே !!!

1 comment:
i have always loved the beach a lot since i grew up very close to it... and i sure should say i haven't read such a wonderful description of it yet ...
amazing :)
Post a Comment